சந்திரயான்-3 பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்



இந்தியாவின் பெரும் கனவு திட்டமான இந்த சந்திரயான்-3 திட்டம் குறித்த பல முக்கிய தகவல்கள் நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். சந்திரயான்-3 திட்டம் வெறும் விஞ்ஞானிகளின் சாதனை மட்டுமல்ல அது இந்தியாவிற்கே ஒரு பெரும் கௌரவத்தையும் பெருமையையும் ஏற்படுத்தக் கூடியதாகும். இது குறித்த முக்கியமான தகவல்களை காணலாம் பாருங்கள்.

1. மூன்றாவது மிஷன்: சந்திரயான்-3 என்பது இஸ்ரோ நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்கான மூன்றாவது மிஷன் ஆகும். முதல் மிஷன் நிலவின் நீல் வட்ட பாதையில் ஆர்பிட்டரை நிலை நிறுத்தி நிலவில் ஆய்வுகளை மேற்கொண்டது. இரண்டாவது மிஷனில் லேண்டரில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விக்ரம் லேண்டர் நிலவில் தற்போது சந்திரயான்-3 மூன்றாவது மிஷனாக இஸ்ரோவிற்கு அமைந்துள்ளது


2. தோல்வியில் இருந்து பாடம்: சந்திரயான்-2 விண்கலம் நிலவில் தரையிறங்கும் போது சில வினாடிகளுக்கு முன் கோளாறு ஏற்பட்டு சாஃப்ட் லேண்டிங் ஆக இல்லாமல் நிலவில் சென்று மோதியது. தற்போது அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட இஸ்ரோ அதிலிருந்த பிரச்சனைகளை எல்லாம் சரி செய்து இந்த முறை நிச்சயம் சாஃப்ட் லேண்டிங் செய்யும்படி திட்டமிட்டு சந்திரயான்-3 விண்கலத்தை தயார் செய்துள்ளது.

3. நிலவின் தென் துருவம்: சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது. இதுவரை வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய லேண்டர்கள் எல்லாம் நிலவின் மையப் பகுதியில் இருந்து ஓரளவு வடபக்கமும் தென்பக்கமும் தள்ளிதான் தர இறங்கியது. ஆனால் சந்திரயான்-3 தென்துருவத்திற்கு மிக அருகில் சென்று திரையரங்க உள்ளது. இதுதான் தென் துருவத்தில் தரையிறங்கும் முதல் விண்கலமாக இருக்கும்.

4. மூன்று பாகங்கள்: சந்திரயான்-3 விண்கலத்தை மூன்று பாகங்களாக பிரிக்கலாம் முதல் பாகம் புரோபல்ஷனல் மாடுல் இது எல்எம்பி 3 ராக்கெட்டிலிருந்து பிரிந்து சென்றவுடன் நிலவு நோக்கி பயணிக்க துவங்கும். நிலவிலிருந்து சுமார் 100 கிலோ மீட்டர் உயரம் வரை இது பயணிக்கும். அடுத்ததாக லேண்டர் மாடுல் புரோபல்ஷனல் மாடுலில்லிருந்து வெளியாகி நிலவு தரையிறங்கும் பணியை துவங்கிவிடும். நிலவில் வெற்றிகரமாக லேண்டர் தரை இறங்கியவுடன் அதிலிருந்து ரோவர் வெளியே வரும். இந்த மூன்றும் சேர்ந்து தான் சந்திரயான்-3 விண்கலம்.

5. 14 நாட்கள் ஆய்வு: நிலவில் லேண்டர் தரையிறங்கியதும் அடுத்த 14 நாட்களுக்கு அது செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. லேண்டர் மற்றும் ரோவர் ஆகிவயற்றிற்கு நிலவில் 14 நாட்கள் தான் ஆயுள் கிடைக்கும். நிலவில் தொடர்ந்து 14 நாட்கள் வெயிலாகவும் பின்னர் இருட்டாகவும் மாறுவதால் வெயில் காலம் இருக்கும் போது மட்டுமே சூரிய ஒளியை பயன்படுத்தி லேண்டரும் ஒவ்வொரு இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

6. பெயர் காரணம்: நிலவு ஆய்விற்காக சந்திரயான் என இஸ்ரோ பெயர் வைத்ததற்கு காரணம் சமஸ்கிருதத்தில் சந்திரயான்-3 என்ற பெயருக்கு நிலவுக்களம் என அர்த்தம். மறைந்த விஞ்ஞானி விக்ரம் சாரா பாய் நினைவாக இதன் லேண்டருக்கு விக்ரம் என பெயர் வைத்துள்ளனர். இதன் ரோவருக்கு பிரக்யான் என பெயர் வைத்துள்ளனர் இந்தப் பிரக்யான் என்ற பெயர் சமஸ்கிருத வார்த்தை இருந்து வந்தது, இதன் அர்த்தம் ஞானம் ஆகும். 

7. எல்விஎம்-3 ராக்கெட்: இந்த சந்திரயான்-3 விண்கலம் என்பது மொத்தம் 3,900 கிலோ எடை கொண்டது. இதை இஸ்ரோ எல்விஎம்-3 ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்புகிறது. இந்த ராக்கெட் சந்திரயான்-3 விண்கலத்தை பூமியிலிருந்து சுமார் 35 ஆயிரம் கிலோமீட்டர் வரை கொண்டு சென்று விடும். 

8. நிலவில் ஆய்வு: இந்த சந்திரயான்-3 விண்கலத்தில் வெற்றிகரமாக ரோவர் வெளியே வந்து தந்த ஆய்வு பணியை துவங்கி விட்டால் அங்கிருந்து புகைப்படம் எடுத்து அனுப்புவதோடு அங்கு மேலும் சில ஆய்வுகளையும் மேற்கொள்ளும் அதன்படி நிலவில் உள்ள தன்மைகள் குறித்து ஆய்வு நடத்தும் அந்த தகவல்களை பூமிக்கு அனுப்பும் இதை இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வுக்காக பயன்படுத்துவார்கள். 

9. நான்காவது நாடு: இதுவரை நிலவில் மொத்தம் மூன்று நாடுகள் மட்டுமே தரையிறங்கியுள்ளன அமெரிக்கா, பழைய சோவியத் யூனியன், அடுத்ததாக சீனா இந்த மூன்று நாடுகளை தொடர்ந்து இந்தியா வெற்றிகரமாக தனது ரோவரை நிலவில் தரையிறக்கி ஆய்வுகளை செய்து விட்டால் இந்த சாதனையை செய்த நான்காவது நாடாக இந்தியா இடம் பெறும். 

10. 20 ஆண்டு கனவு: சந்திரயான்-3 திட்டம் இந்தியாவில் முதன் முறையாக கடந்த 2003ம் ஆண்டு சுதந்திர தின விழா வின் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அறிவித்தார். தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு அந்த கனவு நினைவாகப்போகிறது. இஸ்ரோ விஞ்ஞானிகள் 20 ஆண்டுகளாக இந்த கனவிற்காக கடும் உழைப்பை செய்துள்ளனர். 





Comments

Popular posts from this blog

Traffic Engineering Design Process

THE BASICS OF REBAR: A COMPREHENSIVE GUIDE FOR BEGINNERS